Wednesday, 31 August 2016

Tritiya Sopan Camp - திருதிய சோபன் பயிற்சி முகாம் 2016

பாரத சாரண சாரணியம், உசிலம்பட்டி கல்வி மாவட்டம்

திருதிய சோபன் பயிற்சி முகாம்

இடம்: பராசக்தி மேனிலைப் பள்ளி, S. கோட்டைப்பட்டி

நாள்: 26-08-2016 முதல் 29-08-2016 வரை

முகாம் அறிக்கை

          26.08.2016 க்கு சாரண சாரணியர்கள் பள்ளிவாரியாக வருகை பதிவு செய்து முகாமில் மாணவ மாணவிகளின் கடமை, கண்ணியம், கட்டுபாடு குறித்து மாவட்ட அமைப்பு ஆணையாளர் திரு.M.ஜான் கோவில் பிள்ளை அவர்கள், மாவட்ட பயிற்சி ஆணையாளர் திரு.K.நாராயணன் அவர்கள் விளக்கி கூறினர். மேலும் உதவி ஆசிரியர்களாக திரு.S.வேல்முருகன் அவர்கள், திரு.S.இளங்கோவன், திரு.R.கோவிந்தராஜ் அவர்கள், திரு.K.பிரேம்குமார் அவர்கள், திரு.G.சீனிவாசபெருமாள் அவர்கள், திரு.S.கருணாகரன்ஜெயசிங் அவர்கள், திருமதி.R.ரம்யா அவர்கள், திருமதி.P.இசக்கியம்மாள் அவர்கள் ஆகியோர் நான்கு நாள் பயிற்சி முகாம் பாடத்திட்டங்களை விளக்கினர்.

பாடத்திட்டங்கள்:

1. இறைவணக்கப் பாடல்
2. கொடிப்பாடல்
3. சட்டமும் உறுதிமொழியும்
4. இயக்க வரலாறு
5. திசை காட்டி
6. வனக்கலைக் குறீயீடுகள்
7. கொடி ஏற்றும் முறை
8. முதலுதவி
9. மதிப்பீடு
10. தீயின் வகைகள்
11. நிலப்படம் அறிதல்
12. கூடாரம் அமைத்தல்
13. அணிமுறை செயல் கூட்டம்
14. முடிச்சுகள்
15. ஊதல் சமிக்கை
16. கொடிகளின் வகைகளும் அதன் விளக்கமும்
        ஆகிய அனைத்து பாடங்களும் விளக்கமாக விளக்கப்பட்டன.
24 பள்ளிகளைச் சார்ந்த 221 சாரணர்களும் 107 சாரணியர்களும் தங்கள் குறிபேடுகளில் பாடத்திட்டங்களை கவனமுடன் குறித்து கொண்டனர்.
மாவட்ட பயிற்சி ஆணையர் திரு.K.நாரயணன் அவர்கள் சீருடையின் முக்கியத்துவத்துவத்தையும் திருதிய சோபன் பாடப் பகுதிகளின் சுருக்கத்தையும் விளக்கி கூறி அனைத்து சாரண சாரணியர்களும் பயிற்சி முகாம்களில் பக்குவப்பட பாராட்டி வாழ்த்தினார். நான்கு நாளும் சாரண சாரணியர் பின்பற்ற வேண்டிய தினசரி நிகழ்வுகளை விளக்கி கூறி படைகளாகவும் அணிகளாகவும் பிரிக்கப்பட்டு சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. அதன்படி காலை 6.15 க்கு பேடன் பவுலின் 6 விதமான உடற்பயிற்சிகளை கோட்டைப்பட்டி சாரண ஆசிரியர் திரு.R. கோவிந்தராஜன் அவர்கள் செய்து காட்டி அதில் மாணவர்களையும் ஈடுபடுத்தினர். காலையில் 4 பாடவேளைகளும், மாலையில் 3 பாடவேளைகளுமாக இருபால் சாரண ஆசிரியர்கள் திருதிய சோபன் பாடப்பகுதிகளை மாணவர்களுக்கு தகுந்த துணைக்கருவிகளுடன் மாணவர்களுக்கு விளக்கு கூறினர்.
ஒவ்வொரு நாள் இரவும் பத்து மணிக்கு முகாம் தலைவர் அவர்கள் அன்றைய நாள் நிறைகளையும், குறைகளையும் சுட்டிக் காட்டி நிறைகளை வளர்த்துக் கொள்ளவும் குறைகளைக் களைந்து கொள்ளவும் அறிவுரை வழங்கினார்கள். முகாமிற்கு வருகை புரிந்த மாவட்டச் சாரண ஆணையர் திரு. P. ஆதிநாரயணன் அவர்களும் சாரணிய ஆணையர் திருமதி. A. கிரேஸ் சந்திரா வருகை தந்து சிறப்பித்தனர். பாடித் தீ நிகழ்ச்சி மாவட்ட பயிற்சி ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பராசக்தி மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் திரு. M. கிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பராசக்தி மேல்நிலைப்பள்ளி நிர்வாக உறுப்பினர் திரு. M. சுவாமிநாதன், திரு. M. சீனிவாசன் அவர்கள் வாழ்த்து கூறினர். நிறைவு விழாவில் மாவட்டச் செயலர் திரு. M. ஜெகதீசன், தலைமையாசிரியர், பராசக்தி மேல்நிலைப் பள்ளி, S. கோட்டைப்பட்டி அவர்கள் மற்றும் திரு. S.S. சுப்பிரமணியன், தலைமையாசிரியர், ஸ்ரீ MKV மேல்நிலைப் பள்ளி, மேலப்பட்டி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவு நாள் காலை சர்வ சமய வழிபாட்டில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













No comments:

Post a Comment